சவூதி அரேபியா அரசு மருத்துவமனைகளுக்கு பெண் செவிலியர்கள் தேர்வு
தஞ்சாவூர், மார்ச்.1-
சவூதி அரேபியா நாட்டின் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்ய பெண் செவிலியர்கள், பிசியோதெரபிஸ்டுகள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
செவிலியர்கள்
சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பி.எஸ்.சி. பெண் செவிலியர்கள் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்ற பெண் பிசியோதெரபிஸ்டுகளுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 5-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது.
45 வயதுக்கு உட்பட்ட, ஒரு வருட அனுபவம் உடைய பெண் செவிலியர்கள், இரண்டு வருட அனுபவம் உடைய பெண் பிசியோதெரபிஸ்டுகள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட்டு, வெள்ளை நிறப்பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படங்களுடன் எண். 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-600020` என்ற முகவரியை 5-ந் தேதிக்குள் அணுகி நேர்முகத் தேர்வுக்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய 09940393617, 09443690272 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.