இஸ்ரேல் பாலஸ்தீனில் உள்ள மேற்கு கரை பகுதியில் சோதனை நடத்த திட்டமிட்டு இருந்தது. இதை சம்பத்தப்பட்ட பிரிவில் இருந்த சிப்பாய் ஒருவர் பேஸ்புக்கில் தனது நண்பர்களுக்கு தெரிவித்தார். அதில் சோதனை செய்ய இருந்த நேரமும், இடமும் சரியாக குறித்திருந்தார்.
ஆகவே அந்த சோதனையை நிறுத்திய இஸ்ரேல் ராணுவம் சம்பந்தப்பட்ட சிப்பாயை கைது செய்து 10 நாள் சிறையில் அடைத்தது. இதை இஸ்ரேல் ராணுவ வானொலி தனது செய்தியில் அறிவித்தது.