காசா போர் தோல்வியில் முடிந்தது --- சொல்கிறார் இஸ்ரேலின் முன்னால் உளவுத்துறை அதிகாரி
10.03.2010
லண்டன்: இஸ்ரேலின் முன்னால் உளவுத்துறை அதிகாரியும், இஸ்ரேலின் முன்னால் கப்பற்படை கமான்டருமான அமி அயலான் லண்டன் மாணவர்களிடம் உறையாற்றும் போது கடந்த ஆண்டு இஸ்ரேல் பாலஸ்த்தீனத்தின் மீது மேற்கொண்ட போர் தோல்வியில் முடிந்ததாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில் போரின் உச்சகட்டமான 22வது நாள் இஸ்ரேலிய துருப்புக்கள் நர வேட்டைக்கார்களைப் போல காசாவில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததே தோல்விக்குக் காரணம் என்றார்.
மேலும் மத்திய கிழக்கு பகுதியிpல் அமைதி ஏற்பட வேண்டுமானால் யூதர்களை காசாப் பகுதியில் குடியமத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் போரை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் என்றார்.
அதேவேலையில் காசா போர் குற்றங்களை ஆராய ஐ.நாவால் ஏற்படுத்தப்பட்ட 'கோல்டன் ஸ்டோன்' குழுவிற்கு இஸ்ரேல் ஒத்துழைப்பு மறுக்கிறது என்று எல்.எஸ்.யி (LSE) யின் சர்வதேச சட்டவல்லுநர் கிரிஸ்ட் ஜின்கின் கூறினார்.
மேலும் 'கோல்டன் ஸ்டோன்' மற்றொரு உறுப்பினரான ஐரிஸ்நாட்டு முன்னால் இராணுவ அதிகாரி டெஸ்மான்ட் டிராவர்ஸ் கூறுகையில் இஸ்ரேலிய இராணுவம் காசாவில் பயன் படுத்திய ஆயுதங்களை சர்வதேச அளவில் தடைசெய்ய வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில் 3,500 க்கும் அதிகமான பாஸ்பரஸ் குண்டுகளையும், டைம்பாம்களையும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் பயன்படுத்தியதால் 4,00,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பாதிக்கப்படடிருப்பதாகக் கூறினார்.
லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கலகத்தைச் சார்ந்த நபுல்சி கூறுகையில் இஸ்ரேல் ஆயுதம் முலமே அமைதியை விருப்புவதாகவும், பிரித்தாலும் சூழ்ச்சியை பாலஸ்தீனத்தில் மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டியவர் பாலஸ்தீனத்தின் இரு குழுக்களான ஹமாஸ் மற்றும் ஃபதஹ் ஆகியவை ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
|